Chennai, மார்ச் 17 -- டாஸ்மாக் முற்றுகை போராட்டம் எதிரொலி காரணமாக தமிழிசை, வினோஜ் பி.செல்வம் உட்பட பாஜக முக்கியத் தலைவர்கள் தமிழகம் முழுவதும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக முக்கியத்தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதற்கு, அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை பரபரப்பு கேள்விகளை அடுக்கியுள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக இன்று மார்ச் 17ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டின் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பாஜக முக்கியத் தலைவரான தமிழிசை அவர்களது சாலிகிராமம் இல்லம் முன் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர் வீட்டுக்காவலில் வை...