இந்தியா, பிப்ரவரி 11 -- 7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருமே, பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும், கல்லூரி உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, அவர்களில் பலர், சிறப்புத் தேர்வு எழுதி பணி வாய்ப்பையும் பெற்றவர்கள்.

நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஊதியம் சுமார் 80,000 ரூபாயாக இருக்கையில், முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்...