இந்தியா, பிப்ரவரி 11 -- பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில் பருத்தி நூலுக்கு பதிலாக பாலியஸ்டர் நூல் கலக்கப்பட்ட விவகாரத்தில் தவறு எங்கே நடந்தது என்பதை அமைச்சர் ஆர்.காந்தி வெளிப்படையாக கூறுவாரா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக ஆவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஊழல் நடந்திருப்பதை, தமிழக பாஜக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைத்தபோது, பதிலேதும் கூறாமல் ஒளிந்து கொண்ட கைத்தறித் துறை அமைச்சர் திரு. காந்தி, இந்த ஆண்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும், நான்கைந்து பக்கங்களுக்குக் கதை எழுதியிருக்கிறார்.

இலவச வேட்டி, சேலைக்கான நூல், தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலைகளிடமும், தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்திடமும், தேசிய அளவிலான ஒப்...