இந்தியா, ஏப்ரல் 4 -- "பாஜக மாநில தலைவர் பதவி போட்டியில் நான் இல்லை" என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான போட்டியில் தான் பங்கேற்கவில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியின் எதிர்காலம் மற்றும் நீட் தேர்வு விவகாரம் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

"புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. இதில் எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை," என்று அண்ணாமலை கூறினார். "பாஜகவில் தலைவர்களுக்கு போட்டி என்று எதுவும் கிடையாது. எல்லோரும் சேர்ந்து ஏகமனதாக ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம். அதனால் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று சொன்னேன்," என்று அவர் விளக்கமளித்தார்.

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேசிய அண்ணாமலை, "என்னைப் பொறுத்த...