இந்தியா, பிப்ரவரி 18 -- காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான, தமிழகக் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கியதில், பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்ட இளைஞர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மே மாதம் 5 ஆம் தேதி அன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. அதன்படி, ஆண்களுக்கான 469 காலிப் பணியிடங்களுக்கு, 1,45,...