இந்தியா, பிப்ரவரி 17 -- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் மகன் மூன்றாவது மொழியாக பிரஞ்சு மொழியை கற்று வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், நான் அரசியலில் வருவதற்கு முன், தேசிய கட்சிகள் என்றால் தூரத்தில் பார்ப்பேன். தமிழ்நாட்டில் ஒரு மொழியை திணித்து அதைத்தான் படிக்க வேண்டும் என்று சொல்லி மத்திய காங்கிரஸ் ஆட்சி பெரும் பிரச்னையை ஏற்படுத்தி இருந்தார்கள். 2019ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி தேசிய கல்விக் கொள்கை பிரதமர் மோடிக்கு தரப்பட்டது. அதில் இந்தியாவில் எல்லோரு...