இந்தியா, ஏப்ரல் 11 -- அண்ணாமலைக்கு விரைவில் தேசிய பொறுப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து உள்ளார்.

பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அண்ணாமலை தேசிய அரசியலில் ஈடுபடுத்தப்படுவார் என அமித்ஷா அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், "தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனுத் தாக்கல் செய்து உள்ளார். தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு முன்னோடியாக...