இந்தியா, மார்ச் 28 -- தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டத்தில் செல்வப்பெருந்தகை செய்த ஊழலுக்கு திமுக அரசும் உடந்தையா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில், ஒரு மாபெரும் ஊழலை அரங்கேற்றியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப் பெருந்தகை. இதற்கு திமுக அரசும் உடந்தையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க:- TVK Vijay Speech: 'ஏன் ஜி! தமிழ்நாடுனா அலர்ஜி' மோடி முதல் ஸ்டாலின் வரை கலாய்த்து தள்ளிய விஜய்! தவெக பொதுக்குழு சம்பவம்!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றுவதாக அறிவித்து, அவர்கள், சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகம், மூலமாக, அரசு...