இந்தியா, ஜனவரி 27 -- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை முதல் தகவல் அறிக்கையை குறிப்பிட்டது சட்டப்படி தவறு. பாதிக்கப்பட்ட மாணவின் கண்ணியம் காக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம...