இந்தியா, பிப்ரவரி 2 -- Anitha Kuppusamy: பிரபல பாடகி அனிதா குப்புசாமி கடவுள் பாலாம்பிகா தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயம் குறித்து பேசி இருக்கிறார்.

பிரபல யூடியூப் தளமான பிஹைண்ட்வுட்ஸ் அண்மையில் 'ஆன்மீக சங்கமம் 2025' என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் பலரும் தங்கள் வாழ்வில், கடவுளின் சித்தத்தால் நடந்த ஆச்சரியமான சம்பவங்களை பகிர்ந்தார்கள். அந்த வரிசையில் அனிதா குப்புசாமியும் பேசினார்.

அவர் பேசும் போது, 'இரண்டாவது குழந்தை பிறக்க எனக்கு கொஞ்சம் தாமதமாகிக் கொண்டே இருந்தது. அதற்காக பெரிய, பெரிய மருத்துவர்களையெல்லாம் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கருப்பையில் அடைப்பு இருக்கிறது என்றார்கள்.

ஒரு நாள் சிகிச்சை எடுத்துவிட்டு வந்து கொண்டிருந்தோம். திடீரென்று மழை பெய்து விட்டது. இந்த நிலையில் அங்...