இந்தியா, பிப்ரவரி 2 -- Anil Kumar: விலங்குகளுக்கு உதவும் அமைப்பான 'ஹெவன் ஃபார் அனிமல்' அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் அஜித்குமாரின் தம்பியும், விலங்குகள் மீது பிரியமும் கொண்ட அனில்குமார் பங்கேற்று பேசினார். அவர் பேசும் போது, 'என்னுடைய பெயர் அனில் குமார். 'ஹெவன் ஃபார் அனிமல்' குழு விலங்குகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள்.

நான் உண்மையில் இது போன்றதொரு நிகழ்ச்சிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னதாக, வீட்டில் எந்த ஒரு பிராணிகளையும் நாங்கள் வளர்க்கவில்லை. ஆனால் 2021 தீபாவளி தினத்தில், எங்கள் வீட்டிற்கு நாய் ஒன்று வந்தது. எங்கிருந்து அந்த நாய் வந்தது என்றே தெரியவில்லை.

இந்த நாயை அழைத்துச் செல்வதற்கு யாராவது வருவார்களா என்று நாங்கள் பார்த்தோம்; ஆனால் யாரும் வரவில்லை; அவன் என்னுடனே செட் ஆகிவிட்டான். அவன் ப...