இந்தியா, நவம்பர் 29 -- ஆந்திரா மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தக் கட்சி தெலங்கானா மாநிலத்தில் கால்பதிக்க முடிவு செய்த நிலையில் கடந்த ஆண்டு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு நகர்வுகளை ஷர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஷர்மிளா பாதயாத்திரை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டை பகுதியில் பேரணி நடத்திய ஷர்மிளா, பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ பெட்டி சுதர்சன் ரெட்டியை விமர்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த பிஆர்எஸ் கட்சியினர் ஷர்மிளாவின் வாகனத்தின்மீது ...