இந்தியா, ஏப்ரல் 6 -- தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2024&-25ஆம் ஆண்டில் 9.69% வளர்ச்சியடைந்த நிலையில், வேளாண் துறையின் வளர்ச்சி வெறும் 0.15% ஆக குறைந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2024&-25ஆம் ஆண்டில் 9.69% வளர்ச்சியடைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கக்கூடியது தான் என்றாலும், வேளாண் துறையின் வளர்ச்சி வெறும் 0.15% ஆக குறைந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது. அடிப்படையில் வேளாண்மையை சார்ந்த மாநிலமான தமிழ்நாடு, விவசாயிகள் முன்னேறாமல் முன்னேற முடியாது என்ற உண்மையை அறிந்திருந்தும் வேளாண் வளர்ச்சிக்காக முன்னோக்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு இதுவரை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

மேலும் படிக்க:- Nirmala Sitharaman:...