இந்தியா, ஏப்ரல் 10 -- பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதற்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் அன்புமணி ராமதாஸ்க்கு ஆதரவாக திண்டிவனத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பை மீண்டும் தானே ஏற்பதாக அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சியின் புதிய தலைமுறையினர் தனது தலைமையின் கீழ் சிறிது காலம் பணியாற்ற வேண்டும் என்ற அன்பு கட்டளையை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். இதற்காக, கட்சி அமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த அறிவி...