இந்தியா, டிசம்பர் 8 -- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை நதியின் மேற்கு கரையின் ஓரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது 2000 ஆண்டுகள் பழமையான பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் ஆலயம். இக்கோயிலானது தீராத நோய்களை தீர்க்கும் தலமாகவும், பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் தலமாகவும் திகழ்ந்து வருகின்றது.

ஐந்து நிலைக்கொண்ட ராஜகோபுரத்தின் முதல் பிரகாரத்தில் மூலவராக ஆனந்தவல்லி தாயார் சன்னதியும், நுழைவாயிலின் முன்னே கொடி மரமும், அஸ்திர சக்தியும் நந்திகேஸ்வரரும் காணப்படுகின்றனர். நுழைவாயிலுக்கு முன்னதாக இடது புறம் மூன்று விநாயகரும், கிழக்கு நோக்கியும் ஆனந்தவல்லி அம்மன் சன்னதியின் கன்னி மூலையில் விநாயகரும் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி நாகசுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர்.

தாயாரின் பிரகாரத்தின் மூன்று திசைகளிலும் அம்பாள் இச்சா சக்...