இந்தியா, பிப்ரவரி 26 -- வேகவைத்த சாதம் - 3 கப்

நெல்லிக்காய் - 3

வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நெல்லிக்காயை நன்றாக கழுவி விதைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் சிறிய மிக்ஸி ஜாரில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

வேகவைத்த சாதத்தை ஒரு அகலமான தட்டில் ஆறவைத்து சாதத்தின் மேலே சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து ஆறவிடவேண்டும்.

கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் வேர்க்கடலை சேர்த்து பொரிந்ததும் சாதத்தில் சேர்த்து கலந்து விடவ...