இந்தியா, பிப்ரவரி 1 -- நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்களுக்காக இதை தினமும் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும் என்று மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள். இதில் அதைத் தவிர எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது சிலருக்கு பிடிக்காது. சிலருக்கு ஒவ்வாது. எனவே அதில் எண்ணற்ற ரெசிபிக்களை நாம் செய்து சாப்பிடலாம். அதாவது நெல்லிக்காயை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு முறையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று இயற்கை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். எண்ணற்ற நன்மைகளும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்த நெல்லிக்காயில் ரசம் வைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

* நெல்லிக்காய் - 7

* துவரம் பருப்பு - கால் கப்

(இதை அலசிவிட்டு, குக்கரில் வைத்து நன்றா...