இந்தியா, பிப்ரவரி 1 -- நெல்லிக்காய் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்று என தெரிந்தாலும் பலர் அதை சாப்பிட தயங்குகிறார்கள். உங்கள் வீட்டிலும் நெல்லிக்காய் சாப்பிட விரும்பாதவர்கள் இருந்தால் காரசாரமாக இப்படி சட்னி அரைத்து கொடுங்கள். ருசி அருமையாக இருக்கும். சூடான இட்லியுடன் சாப்பிட அட்டகாதமாக இருக்கும். சாதத்திற்கும் இதை பயன்படுத்தலாம். உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. நெல்லிக்காயில் விட்டமின் சி உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளது.

முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி விதை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடான பிறகு அதில் ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பருப்பு நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் வெள்ளை எள்...