இந்தியா, மார்ச் 26 -- தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது. இதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

இந்த நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்துக்கு கொண்டுச் சென்...