இந்தியா, ஏப்ரல் 11 -- அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பில் வைக்கப்பட்ட பேனர்கள் மாற்றப்பட்ட சம்பவம் அரசியல் விவாதத்தை கிளப்பி உள்ளது.

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்து உள்ளார். பாஜக- அதிமுக கூட்டணியை உறுதி செய்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை காட்டுவதற்காக செய்தியாளர் சந்திப்பையும் அமித்ஷா நிகழ்த்துவார் என தகவல் வெளியானது. இதற்காக செய்தியாளர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் தங்கி உள்ள அவர் இன்று காலை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசையின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் காலை 11 மணிக்கு மேல் மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குரு மூர்த்தி இல்லத்திற்கு சென்று அவருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந...