இந்தியா, மே 5 -- ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து, மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் இயக்குநர் அமீர் படம் குறித்தும், பொதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய அவருடைய நண்பர் ஜாபர் சாதிக் குறித்தும் பல்வேறு விஷயங்களை பேசினார்.

இயக்குனர் அமீர் பேசும்போது, "என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வ...