இந்தியா, ஏப்ரல் 14 -- அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திலேயே அம்பேதக்ர், பெரியார், வேலுநாச்சியார்,அஞ்சலையம்மாள், காமராஜர் ஆகியோருக்கு சிலை உள்ள நிலையில், சாலையோரம் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திடீரென சென்று விஜய் மரியாதை செலுத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

நாடு முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அரசு சார்பிலும் அவரது சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஐ சமத்துவ நாளாக அறிவித்ததன் அடிப்படையில், இந்நாள் ஆ...