இந்தியா, ஜனவரி 26 -- முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கவும், பருக்களால் ஏற்பட்ட பள்ளத்தைப் போக்கவும், சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கவும் கற்றாழை மிகவும் உகந்தது. அதை நீங்கள் உறங்கும் முன்னரும், பகல் நேரத்திலும் முகத்தில் பூசலாம். இரவு நேரத்தில் பூசுவதால் உங்கள் சருமத்துக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? குளிர் காலத்தில் வறண்ட சருமம் ஏற்படுவது பெரிய பிரச்னைதான். இதுகுறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறது. முகப்பருக்கள் மற்றுமொரு சரும பிரச்னையாகும். இதற்கு ஆலுவேரா ஜெல் எனும் கற்றாழை ஜெல் உதவுகிறது. இதில் உள்ள இதமளிக்கும் மற்றும் நீர்ச்சத்துக்களைக் கொடுக்கும் குணங்கள், பல்வேறு சரும பிரச்னைகளை தீர்ப்பதாக நம்பப்படுகிறது. இதன் நீர்ச்சத்துக்களை வழங்கக்கூடிய தன்மை மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள்தான். இந்த கற்றாழைய...