இந்தியா, ஜனவரி 27 -- கற்றாழை ஜெல்லை உங்கள் முகத்தில் தடவும்போது அது உங்கள் முகத்திற்கு பொலிவைக் கொடுக்கிறது. அதனுடன் சருமத்தில் நீர்ச்சத்துக்களை தக்கவைக்கிறது. சருமத்துக்கு இதமளிக்கும் நற்குணங்கள் கொண்டது. சருமத்தை பளபளக்கச் செய்கிறது. முகப்பருக்களை எதிர்த்துப் போராட வைக்கிறது. சருமத்தில் காயங்ககள் ஏற்பட்டால் உடனடியாக குணமடையச் செய்கிறது. எண்ணற்ற நற்குணங்கள் கொண்ட கற்றாழைச் சாற்றை உங்கள் முகத்திற்கு எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஜெல்லை நீங்கள் இரவு அல்லது பகல் என எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் இரவில் பயன்படுத்துவது சிறந்தது. இதை நீங்கள் உங்கள் முகத்தில் நேரடியாகப் பூசலாம். அதில் உங்கள் சருமத்துக்கு ஏற்ப எந்த பொருளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். பல்வேறு வகை சருமத்துக்கும் கற்றாழை ஜெல்லை எப்பட...