இந்தியா, ஏப்ரல் 8 -- Allu Arjun & Atlee: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவரது அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தான் எடுத்த சில படங்களிலேயே பான் இந்தியா இயக்குநராக உயர்ந்து நிற்கும் அட்லீயின் இயக்கத்தில் இணைந்து அல்லு அர்ஜுன் நடிப்பது இன்று உறுதியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படாததால் தற்போது இது AA22 x A6 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 8) அல்லு அர்ஜுனின் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அப்டேட்டை திரைப்படக் குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் ஒரு ஸ்பெஷல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் - அட்லீ திரைப்பட அறிவிப்புக்காக ஒரு ஸ்பெஷ...