இந்தியா, மார்ச் 12 -- உலக அளவில் 15வது இடத்தில் இருந்து வரும் லக்‌ஷயா சென், உலக அளவில் 37வது இடத்தில் இருந்து வரும் சீன தைபே வீரர் ஷு-லீ-யாங்க் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக அளவில் 28வது இடத்தில் இருக்கும் மாளவிகா, உலக அளவில் 12வது இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் வீராங்கனை இயோ ஜியா மின் என்பவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

பிடபிள்யூஎஃப் உலக டூர் போட்டிகளில் ஒன்றாக இருந்து வரும் சூப்பர் 1000 போட்டி அந்தஸ்தை ஆல் இங்கிலாந்து ஓபன் 2025 பேட்மிண்டன் பெற்றுள்ளது. இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரரான லக்‌ஷயா சென், சீன தைபே வீரர் ஷு-லீ-யாங்க் என்பவரை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் முதல் செட்டில் 13-21 என்ற கணக்கில் லக்‌ஷயா சென் தோல்வியுற்றார். இதன் பின்னர் சிறப்பாக கம்ப...