இந்தியா, ஏப்ரல் 15 -- சித்திரை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாள் 'அட்சய திரிதியை' திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புதன்கிழமை (சித்திரை 17) 'அட்சய திரிதியை' வருகிறது. 'அட்சய திரிதியை' என்றால் உடனே அனைவரது நினைவுக்கும் வருவது தங்கம் தான். காரணம் 'அட்சய' என்றால் பெருகக் கூடியது என்று பொருள்.

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனால் அட்சய திரிதியையன்று நகைக்கடைகளில் ஈக்கள் மொய்ப்பதை போல் கூட்டம் அலைமோதும். அவரவர் சக்திக்கேற்ப தங்கம் வாங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் தற்போது தங்கம் விற்கும் விலைக்கு குண்டுமணி தங்கம் வாங்குவதே குதிரை கொம்பாக இருக்கிறது. இஸ்ரோ ராக்கெட்டை விட தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது தான் இதற்கெ...