சென்னை,மதுரை, பிப்ரவரி 6 -- நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவரது ரசிகர்களின் ஓட்டுகளை இழக்க நேரிடும் என்கிற அச்சம் அனைத்து கட்சிகளுக்கும் வந்தது. குறிப்பாக திமுக, விஜய் ரசிகர்களின் ஓட்டுகளை சமன் செய்ய, நடிகர் அஜித்துக்கு வழியே சென்று சில பாராட்டு பத்திரங்களை வழங்கிக் கொண்டிருப்பதை சமீபத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை அறிந்த பாஜக, பத்ம பூஷன் விருது கொடுத்து, அஜித் ரசிகர்களை தன் வசமாக்க அதுவும் முயன்று வருகிறது.

இப்படி அஜித் ரசிகர்களை குறி வைக்க அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் அஜித் கட்டுப்பாட்டில் எந்த ரசிகர்களும் இல்லை. ரசிகர் மன்றங்களை கலைத்தவர் அஜித். இருப்பினம் சுயதீனமாக அவரது ரசிகர்கள், அஜித்தை பின்தொடர்கின்றனர். அவர்களை யாரும் ஒருங்கிணைப்பதில்லை. அவர்கள் முடிவை, அவர்...