இந்தியா, ஜனவரி 26 -- நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அவரது வாழ்க்கையில், அவர் எடுத்த முக்கிய முடிவு குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் இங்கே பார்க்கலாம்

நடிகர் அஜித்குமாரின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது மங்காத்தா. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் அவரது கெரியர் மட்டுமல்லாமல், அஜித் சினிமா வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப்படத்தில் முழுக்க, முழுக்க வில்லனாக அஜித் வெளிப்படுத்தி இருந்த நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.

அந்தப்படத்தில் அஜித் எடுத்த மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று; தன்னுடைய வெள்ளை நரையுடன் படத்தில் தோன்றுவது. கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், கொஞ்சம் பிசகினாலும் ரசிகர்கள் கிழவன் என்று சொல்லிவிட்டு சென்...