இந்தியா, பிப்ரவரி 9 -- Ajith Kumar: நடிகர் அஜித் குமாரை இப்போது அனைத்து மக்களும் கொண்டாடினாலும், அவர் சினிமாவின் தொடக்க காலத்தில் மக்கள் மனதில் இடம் பெற பெரிதாக கஷ்டப்பட்டார். அந்த மாதிரியான காலகட்டத்தில் தான் இயக்குநர் வசந்த், தான் இயக்கிய ஆசை படத்திற்கு அஜித்தை கதாநாயகனாக தேர்வு செய்து அவரை சாக்லேட் பாயாக மாற்றினார்.

இந்நிலையில், இயக்குநர் வசந்த், தனது ஆசை படத்திற்கு அஜித்தை ஏன் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார் என பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு சில மாதம் முன் பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "அரவிந்த் சாமி மாதிரி ஒருத்தர கொண்டு வரணும்ன்னு நெனச்சது தான் அஜித். என்னோட மைண்ட்ல அஜித் ஒரு அழகன்னு பதிஞ்சது. அவரு இப்போவும் ரொம்ப அழகு. அதுனால நான் அழகன், பேரழகன்னு நெனைக்குறத ஆசை படத்துல மக்களும் நெனைக்கணும். அதுக்காக நான் படத்துல முதல் சீனே வச...