இந்தியா, பிப்ரவரி 8 -- Ajith Kumar: ஆசை படத்திற்கு பின் மக்களின் ஆசை நாயகனாக சுற்றிக் கொண்டிருந்த அஜித் குமாரை அதிரடி வில்லனாக காட்டிய படம் தான் வாலி. ஒரு வார்த்தை கூட பேசாமல் மொத்த வில்லத்தனத்தையும் காட்டி நடித்து அசத்தி இருப்பார். அஜித். அதே படத்தில் உருகி உருகி காதலித்து பொய் மேல் பொய் சொல்லி மாட்டிக் கொண்டு அசடு வலியும் நபராகவும் நடித்திருப்பார். ஒரே படத்தில் வில்லனாகவும், காதல் மன்னனாகவும் இரட்டை வேடத்தில் நடித்து வாலி படத்தால் தன் கெரியரை சர்ரென உச்சத்திற்கு ஏற்றி இருப்பார் அஜித்.

இன்று உலகம் முழுவதும் தனக்கான ரசிகர்களை வைத்திருக்கும் அஜித்திற்கு இந்த வாலி படம் எப்படி கிடைத்தது. இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டு, இன்று தென்னிந்திய சினிமாவின் மாபெரும் ஆளுமையாக எஸ்.ஜே.சூர்யா இருக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை மறைந்த நட...