இந்தியா, பிப்ரவரி 10 -- Ajith Kumar: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த வாரம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் விடாமுயற்சி படம் வெளியானது. இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு கலவையான உணர்வைக் கொடுத்துள்ளது. அஜித் குமார் எந்தவொரு மாஸ் காட்சிகளும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதனைப் போல இந்தப் படத்தில் இருப்பதை ஒரு தரப்பு கொண்டாடியும், ஒரு தரப்பு நாங்கள் எதிர்பார்த்த அஜித் குமார் மிஸ் ஆனதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த சமயத்தில் அஜித்தின் வீடியோ ஒன்று வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. தற்போது அஜித் குமார், தான் ஒப்பந்தம் செய்த படப்பிடிப்புகளை எல்லாம் முடித்துவிட்டு கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், பயிற்சிக்கு நடுவே அவர் செய்த சம்பவம் தான் இப்போது மக்கள் மத்தில் அவரின் இமேஜ...