இந்தியா, ஜனவரி 26 -- Ajith: நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, பத்திரிகையாகளர் வலைப்பேச்சு அந்தணன் நடிகர் அஜித் மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். அஜித்துக்கு எதன் அடிப்படையில் விருதுன்னு புரியல என்றும்; அவரே தன்னை நடிகர்னு நினைக்கல என்றும் வலைப்பேச்சு அந்தணன் பகடி செய்தார்.

இதுதொடர்பாக வலைப்பேச்சு அந்தணன் தனது யூட்யூப் சேனலில் பேசியிருப்பதாவது, ''நடிகர் அஜித்துக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருக்கு என்ற செய்தியைக் கேட்டதும் இவர் எந்த நிகழ்ச்சிக்கும் போமாட்டாரே, அதுவேறு போகாமல் விட்டுவிட்டால் சர்ச்சையாகிடுமேன்னு பயந்தேன்.

எனக்குத் தெரிந்து அவருக்கு இந்த விருதினை அறிவிப்பதற்கு முன்பு, அவரது பிரைவைசியைக் கெடுக்க முடியாதுன்னு நினைச்சிருக்கலாம். அவரது கொள்கையே பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்பதுத...