இந்தியா, ஜனவரி 26 -- Ajith:வாழ்க்கையே விடாமுயற்சி தான்.. அஜர்பைஜானில் ஒரு டிகிரி.. நான் போட்டுருந்தது அஜித் சாரோட ஜாக்கெட் என நடிகை ரெஜினா கசாண்ட்ரா கூறியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்து, வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் திரைப்படம், விடாமுயற்சி.

இந்நிலையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் யூட்யூப் சேனலில், நடிகை ரெஜினா விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் சூட் செய்யும்போது, விடாமுயற்சி படத்தின் முதல் டீஸர் வந்தது. முதலில் எல்லோருக்கும் போட்டு காட்டுனாங்க. ஏதோ ஸ்க்ராட்ச் மியூசிக் போட்டுட்டு, காட்டுனாங்க. அதுவே, ரொம்ப கிரிப்பிங்காக இருந்தது. Raw Footage அதனை எடிட் பண்ணி காட்டுனாங்க. அதுவே தி...