இந்தியா, பிப்ரவரி 5 -- சமீப காலமாக சமூக வலைத் தளங்களில் பல உணவுகள் குறித்து பொய்யான வதந்திகள் பரப்பபடுகின்றன. அதிலும் இதை சாப்பிடாதீர்கள்! என்ன ஆபத்து என பல அச்சம் ஊட்டும் வார்த்தைகளால் நம்மை பயமுறுத்துகின்றனர். ஆனால் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை குறித்து நாம் தேடி படிப்பதில்லை. அதற்கான காரணங்கள் குறித்தும் கேள்வி எழுப்புவதில்லை. இந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக பரப்பப்பட்டு வரும் ஒரு செய்தி உள்ளது. அது தான் ஆசியாவில் பெரும்பான்மையாக சமையலில் பயன்படுத்தும் அஜினோமோட்டோ என்ற உப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற செய்தி ஆகும். ஆனால் இது குறித்து தற்போது பிரபல குழந்தைகள் நல மருத்துவரும் உணவியல் நிபுணருமான அருண் குமார் அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளாற்ற. அதில் அஜினோமோட்டோ குறித்து அவர் பகிர்ந்த அனைத்தையும் இங்க...