இந்தியா, ஜனவரி 28 -- Aishwarya Rai: பாலிவுட் நடிகர் பாபி தியோல் நேற்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நாளில் அவரைப் பற்றி தெரியாத ஒரு தகவலை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

பாபி தியோல், கடந்த பல ஆண்டுகளாக, ஒரு தனிநபராக மட்டுமல்ல, ஒரு நடிகராகவும் மிகவும் வளர்ந்து உச்சம் பெற்றுள்ளார். காதல் நாயகனாக திரைப்பயணத்தை தொடங்கிய இவர், ரன்பீர் கபூருடன் அனிமல் (2023) படத்தில் ஒரு வார்த்தை கூட பேசமால் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். இதனால், இப்போது, இந்திய சினிமா விரும்பும் வில்லன் நடிகராகவே மாறிவிட்டார்.

ஆனாலும், பல ரசிகர்களின் மனதில் காதல் நாயகன் பாபிக்கு என்றும் ஒரு இடம் உண்டு! காதல் நாயகனாக அவரது நடிப்பில் மிகவும் மறக்கமுடியாத படங்களில் ஒன்று Aur Pyaar Ho Gaya. இந்தப் படம் 1997ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் பாபி தியோலிந் கதாநாயகி...