இந்தியா, ஏப்ரல் 15 -- சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே 2 ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.15)வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 2.5.2025 - வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

இதில் கலந்துகொள்ள செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.உறுப்பினர்கள் அனைவரும் தங்களு...