மதுரை,சென்னை, ஜனவரி 28 -- AIADMK: டங்ஸ்டன் ஏலம் ரத்து தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். அது தொடர்பாக அஇஅதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்து, பொதுமக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, போராட்டங்களின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் மக்களின் குரலாக ஓங்கி ஒலித்தமைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான 'புரட்சித் தமிழர்' எடப்பாடி மு.பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (28.1.2025 - செவ்வாய்க் கிழமை), டங்ஸ்டன் சுரங்கத்...