இந்தியா, பிப்ரவரி 23 -- Aghori Kalaiyarasan: தமிழ்நாட்டில், மக்கள் கடவுளின் மீது நாட்டத்தை கொண்டு செல்ல செல்ல நமக்கு புதுப்புது கடவுள்களும் கடவுள்களின் தூதர்களும், தான் தான் கடவுள் என சொல்லிக் கொள்பவர்களும் அருள் வாக்கு சொல்பவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அப்படி, அகோரியாக மாறி அருள் வாக்கு கூறி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அகோரி கலையரசன். ஒருபக்கம் குடும்ப வாழ்க்கையும் மறுபக்கம் ஆன்மீக வாழ்க்கையும் நடத்தி வந்த இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனை தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்நிலையில், பிரச்சனை முடிந்த சில மாதங்களுக்கு பிறகு, கலாட்டா பின்க் மீடியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் பேசிய அகோரி கலை, " என் குடும்ப பிரச்சனை எல்லாம் அந்த சமயத்துலயே முடிஞ்சது. இப்போ அதெல்லாம் எதுவும் இல்...