இந்தியா, பிப்ரவரி 11 -- அகத்திக்கீரையை நாம் பெரும்பாலும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம். அதை அமாவாசை நாளில் பசுக்களுக்கு கொடுக்கும் ஒரு உணவாகவும், மரணம், திதி போன்ற சடங்குகளுக்கும் மட்டும் சாப்பிடுவோம். அகத்திக்கீரை எண்ணற்ற நன்மைகளைக் கொண்டது. இதில் சூப் வைத்து பருகுவது உங்கள் உடலுக்கு நல்லது. ஆனால் இந்தக் கீரையையும் நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக நீங்கள் ஒன்று செய்யலாம். அதுதான் அகத்திக்கீரை பொடி. இதை செய்து வைத்துக்கொண்டால் நீங்கள் தேவைப்படும்போது எடுத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவை அள்ளம். அகத்திக் கீரைப் பொடியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

வரமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்

பாசிப்பருப்பு - ...