Hyderabad, ஏப்ரல் 3 -- Adolescence Web Series: நெட்பிளிக்ஸில் வெளியான நான்கு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப் சீரிஸ் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த குற்றம் சார்ந்த நாடகத் தொடரின் பெயர் Adolescence (அடோலெசன்ஸ்). இது நெட்பிளிக்ஸில் புகழ்பெற்ற இரண்டு வெப் சீரிஸ்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. பார்வையாளர்கள் எண்ணிக்கையில் Stranger Things 3 (ஸ்ட்ரேஞ்சர் திங் 3) மற்றும் Bridgerton (பிரிட்ஜ்டன்) சீசன் 2 இதற்குப் பின்னால் உள்ளன.

மேலும் படிக்க| நயன்தாரா- தனுஷ் விவகாரத்தில் நெட்பிளிக்ஸ் வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்.. அடுத்தது என்ன?

நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் குற்றம் சார்ந்த நாடக தொடர் Adolescence (அடோலெசன்ஸ்). இந்தத் தொடர் ஏற்கனவே 96.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் நெட்பிளிக்ஸின் அனைத்து காலங்களிலும் சிறந்த ஆங்கில...