இந்தியா, ஏப்ரல் 12 -- அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியிருப்பதை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில், ஆதிமுக-பாஜக கூட்டணி, தேமுதிகவின் தேர்தல் திட்டங்கள், மற்றும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, பிரேமலதா, "நேற்று ஆதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியதாக தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன். அது அவர்கள் இரு கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப் பற்றி நாங்கள் எந்த கருத்தும் இப்போது சொல்ல முடியா...