இந்தியா, ஏப்ரல் 12 -- ஓ.பன்னீர் செல்வம் தனிமைப்படுத்தப்பட மாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) அமமுக உறுதியாக இடம்பெற்றுள்ளதாகவும், திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தனது உடல்நிலை குறித்து வெளியான வதந்திகளை மறுத்த அவர், "நான் 100% ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்னும் 30 ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காகவும், அமமுக தொண்டர்களுக்காகவும் உறுதியுடன் செயல்படுவேன்" என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "எனக்கு எந்த உடல் பிரச்சனையும் இல்லை. ம...