இந்தியா, ஏப்ரல் 11 -- வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து உள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் பேசிய அமித்ஷா, அனைவருக்கும் பங்குனி உத்தரம் நல்வாழ்த்துகள் என்று கூறி தனது பேச்சை தொடங்கினார்.

அடுத்து வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலை சந்திக்கும். தேசிய அளவில் இக்கூட்டணிக்கு பிரதமர் மோடியும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியும் தலைமை ஏற்பார்கள். டிடிவி தினகரன், ஓபிஎஸ் அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதில் பாஜக தலையிடப் போவதில்லை என அமித்ஷா கூறினார்.

ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் ...