இந்தியா, மார்ச் 31 -- மிதுன் பழனிசாமியை வைத்து எடப்பாடி பழனிசாமியை பாஜக வழிக்கு கொண்டு வந்து உள்ளதாக அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் நிலவும் மக்கள் பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக ஈபிஎஸ் பேசி இருந்தார். இந்த நிலையில் அதிமுக உடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அமித்ஷா பேட்டி அளித்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் பேசு பொருள் ஆகி உள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி.யும் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளவருமான கே.சி.பழனிசாமி இச்சந்திப்பு குறித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார்....