இந்தியா, பிப்ரவரி 14 -- ஆறு மாதம் பொறுமையாக இருந்தால் ஓபிஎஸை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து ஈபிஎஸிடம் பேசுவோம் என திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்து உள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில், "அருமை அண்ணன் ஓபிஎஸ் ஆக இருக்கட்டும். வேறு யாராக இருக்கட்டும். அதிமுக வளர வேண்டும் நினைத்தால் வழக்கு மன்றத்துக்கு போகவே கூடாது. ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருங்கள். எங்களை போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் எடப்பாடியாரிடம் சென்று உங்களை சேர்த்துக் கொள்ள சொல்லி கேட்கிறோம். எங்களால் செய்ய முடிந்த நன்மை இது ஒன்றுதான்" என தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க: ADMK VS DMDK: ராஜ்யசபா சீட்! தேமுதிகவுக்கு கல்தா கொடுக்கிறாரா ஈபிஎஸ்! ஆழம் பார்க்கிறாரா பிரேமலதா?

அதிமுகவின் கட்சித் தலைமை, இரட்டை இலை சி...