இந்தியா, மார்ச் 29 -- டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'மக்கள் நலனுக்காக சாதாரண கட்சித் தொண்டனாக கூட பணியாற்ற தயார்' என்று சொல்லி உள்ளார். அவருக்கு ஏதேனும் அழுத்தம் இருந்ததா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, "இந்த கேள்வியை நீங்கள் அண்ணாமலையிடம் கேட்டால் நன்றாக இருக்கும். அவர் மனதில் என்ன நினைத்து பேசுகிறார் என்பது எனக்கு தெரியாது. எனவே அவரிடமே கேட்டால் நல்லது," என்றார்.

தொடர்ந்து அண்ணாமலை குறித்து பேசிய அவர்"எல்லா அரசியல் தலைவர்கள் மக்களை நேசிக்க கூடியவர்கள்தான். அதில் போலித்தனமும் சந்தர்ப்பவாதமும் இருக்கக் கூடாது. போலித்தனம் இல்லாததால்தான் அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சி செய்தது, 2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வரும் இயக்கமாகவும் அதிமுக உள்ளது," என்று முனுசாமி பெருமிதம் தெரிவித்தார்.

தவெக-வில் ஆத...