இந்தியா, ஏப்ரல் 13 -- Adhik Ravichandran: 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றிக்கொண்டாட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், குட் பேட் அக்லி படத்தில் நடித்த திரைநட்சத்திரங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், 'என்னுடைய கனவில் நான் உறைந்து நிற்கிறேன் என்று சொல்லலாம். 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக நான் ஹைதராபாத்திற்கு என்னுடைய முதல் திரைப்படமான 'திரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படத்திற்காக வந்தேன். அந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் தான் ஹீரோவாக நடித்தார். அவருடன் என்னுடைய உறவானது மிகவும் உறுதியானதாக மாறியிருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படத்தை பொருத்த அளவுக்கு ஜிவி பிரகாஷ் குமாரின் இசையானது ஒரு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கமிட்டாகும் பொழுது அஜித் சார் க...