இந்தியா, ஏப்ரல் 10 -- Adhik Ravichandran: அஜித்குமார் ஏன் மிகவும் அரிதான நபர் என்பது குறித்து குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கலாட்டா ப்ளஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'என்னுடைய அப்பா பல வருடங்களாக திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அவரால் இயக்குநராக மாற முடியவில்லை. இந்த நிலையில் நான் திரைத்துறைக்கு வந்தேன். நான் திரைத்துறைக்குள் நுழையும் பொழுது எனக்கு 22 வயது. அப்போது இருந்த மெச்சூரிட்டியை வைத்து நான் ஒரு படத்தை எடுத்தேன்.

வருடத்திற்கு சின்ன சின்ன பட்ஜெட் படங்களை செய்து, நன்றாக சம்பாதித்து, வீட்டை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த...