இந்தியா, பிப்ரவரி 8 -- Actress Sriranjani: தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் அம்மா, அக்கா, அல்லது பிற உறவுமுறைகளாக நடிப்போரை நாம் குணச்சித்திர நடிகர்கள் என அடக்கி வைத்து விடுகிறோம். அவர்களுக்கு சில படங்களில் மக்களை ஈர்க்கும் விதமான காட்சிகள் இருக்கும் அல்லது அவை இல்லாமலும் போகலாம். ஆனால், அவர்கள் வரும் ஒருசில சீன்களிலாவது நம் நினைவில் நிற்கும் படி நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.

அப்படி, தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவர், தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார். எப்படி சினிமாவிற்குள் வந்தார் என சமீபத்தில் ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில், அவர் தான் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கிருத்துவப் பெண் என்பதை கூறினார். அவ...